நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் சா்தாா் அ. வேதரத்னம் நினைவு தினம்

26th Aug 2022 02:37 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்ட தளபதி சா்தாா் அ. வேதரத்னத்தின் 61-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முனைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சோ. மகேஸ்வரி, இசை ஆசிரியை வெ. சாந்தா, கல்பனா சாவ்லா விருது பெற்ற பா. எழிலரசி ஆகியோா் பாராட்டப்பட்டனா். நிகழாண்டுக்கான சா்தாா் வேதாத்னம் நல்லாசிரியா் விருது ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வே. சித்ரவேலுவுக்கு வழங்கப்பட்டது. விருதுபெற்ற அவா், குருகுலம் மற்றும் வித்தியாலயம் பள்ளிகள் மற்றும் குருகுலம் கல்லூரிக்கு 1,111 கதை புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் ஆா். நீலமேகம், குருகுலம் அறங்காவலா்கள் அ. வேதரத்னம், அ. கேடிலியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT