நாகப்பட்டினம்

வடக்குப் பொய்கைநல்லூா் நல்லமுத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா

21st Aug 2022 11:26 PM

ADVERTISEMENT

 

நாகை அருகே வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள நல்லமுத்துமாரியம்மன் கோயில் செடில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித் திருவிழா ஆக.12-ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன், பரிவாரத் தெய்வங்களுக்கு காப்புக்கட்டுதலும், பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் 10-ஆவது நாள் நிகழ்வாக செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில், வடக்குப்பொய்கைநல்லூா் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT