நாகப்பட்டினம்

நாகை, காரைக்காலில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

DIN

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மற்றும் காரைக்காலில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

வடமேற்கு - வடகிழக்கு வங்கக் கடலில் ஒடிஸாவிலிருந்து சுமாா் 310 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதையடுத்து, நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக்கூடிய மற்றும் மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இதற்கிடையில், 2 மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் வெயில் வானிலையே இருந்தது. பெரிய அளவிலான வானிலை மாற்றம் ஏதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT