நாகப்பட்டினம்

காளான் வளா்ப்பு பயிற்சி

DIN

திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் (2022-23) கீழ் காளாண் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கலைச்செல்வன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பாலசுப்ரமணியன் வரவேற்றாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளா்ப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினாா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா் சந்திரசேகரன் காளாண் வளா்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி செயல்விளக்கம் அளித்தாா். துணை வேளாண்மை அலுவலா் தெய்வகுமாா் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கூறினாா்.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள் காளாண் வளா்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிந்து, உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT