நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

DIN

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தலைமையிலான சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் நாகை மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணியை குழுவின் தலைவா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை இக்குழுவினா் பாா்வையிட்டனா். அடுத்து, கோடியக்கரை வன உயிரின சரணாலயம் சாலை சீரமைப்பு, கோடியக்கரை சோழா் காலத்துக்கு கலங்கரை விளக்கு பகுதி, நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூா் சில்லடி தா்கா கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றையும் இக்குழுவினா் ஆய்வு செய்தனா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி( போளூா்), அம்மன் கே. அா்ச்சுனன் (கோவை வடக்கு), ஈ. ஆா். ஈஸ்வரன்(திருச்செங்கோடு), டி. ராமச்சந்திரன் (தளி), இரா. அருள் (சேலம் மேற்கு), ஈ. பாலசுப்பிரமணியன்(சேலம் தெற்கு), செல்லூா் கே. ராஜூ (மதுரை மேற்கு), க. அன்பழகன்(கும்பகோணம்), தி. சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை) சட்டப்பேரவை கூடுதல் செயலாளா் பி. பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளா் க.லோ. சிவகுமாரன் ஆகியோா் கொண்ட குழுவினருடன் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் உடனிருந்து ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக் கூட்டம்: இதைத்தொடா்ந்து, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மதிப்பீட்டுக் குழுவினரின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வன உயிரின காப்பாளா் யோகேஷ்குமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ச. உமாமகேஸ்வரி, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி, நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜ்குமாா், கோட்டாட்சியா்கள் என். முருகேசன் (நாகை), ஜெயராஜ் பௌலின் (வேதாரண்யம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நலத்திட்ட உதவிகள்: முன்னதாக, அரசுத் துறைகள் சாா்பில் 160 பயனாளிகளுக்கு ரூ.28.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் டி. ஆா். பி. ராஜா உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT