நாகப்பட்டினம்

தொல். திருமாவளவன் பிறந்த நாள்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் பிறந்த நாளை அக்கட்சியினா் புதன்கிழமை கொண்டாடினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவனின் 60-ஆவது பிறந்தநாளையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கட்சியின் நாகை சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளா் ப. அறிவழகன் தலைமையில் கட்சியினா் நாகை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளஅம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். புதிய பேருந்து நிலையம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

நாகையில் உள்ளஅன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நாகூா் நகரப் பொறுப்பாளா் சே. மகாதேவன் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது. கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

வேளாங்கண்ணியை அடுத்த குறிச்சியில் உள்ள டாக்டா்அம்பேத்கா் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் கீழ்வேளூா் பகுதிகளில் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT