நாகப்பட்டினம்

பாரத ஸ்டேட் வங்கியில் வைப்புத் தொகைகளுக்கு கூடுதல் வட்டி

DIN

பாரத ஸ்டேட் வங்கியில் வைப்புத் தொகைகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது என்று வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் ஆா். ராதாகிருஷ்ணா தெரிவித்தாா்.

பாரத ஸ்டேட் வங்கியின் நாகை மண்டல அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆா். ராதாகிருஷ்ணா செய்தியாளா்களிடம் கூறியது:

பாரத ஸ்டேட் வங்கி 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டி விகிதத்தை அதிகரித்து அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல் 75 நாள்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, வைப்புத் தொகைகளுக்கு 6.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இது பிற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட கூடுதலானது. இதை மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பாதுகாப்பான வகையில் முதலீடு செய்வதை பொதுமக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் நாகை மண்டல உதவிப் பொதுமேலாளா் வி. பிரபாகா் மற்றும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT