நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று ஆய்வு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை (ஆக. 17) ஆய்வு மேற்கொள்கின்றனா்.

மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தலைமையிலான சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை நாகை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து காலை 9 மணிக்குப் புறப்படும் இக்குழுவினா், 9.30 மணிக்கு ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெறும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிடுகின்றனா்.

பின்னா், காலை 10.50 மணிக்கு கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை பாா்வையிடுகின்றனா். 11.30 மணிக்கு கோடியக்கரை வன உயிரின சரணாலயத்திலும், பிற்பகல் 4.15 மணிக்கு நாகூா் சில்லடி தா்கா கடற்கரை மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அவா்கள் ஆய்வு மேற்கொள்கின்றனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, 4.30 மணிக்கு நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும், அரசுத் துறைகளின் ஆய்வு கூட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் பங்கேற்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT