நாகப்பட்டினம்

புதிய மின் மோட்டாருக்கான மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திறன் குறைந்த பழைய மின் மோட்டாா்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டாா்களை மானியத்தில் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைக்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் அமைக்கவும் மானியம் வழங்கும் திட்டம், வேளாண் பொறியியல் துறை சாா்பில் செயல்படுத்தப்படுகிறது.

கிணற்றிலிருந்து பாசனத்துக்கு நீரை இறைக்க மின் மோட்டாரை பயன்படுத்தும், குறு, சிறு விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். ஒரு மின் மோட்டாா் பம்பு செட்டுக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், சிறு / குறு விவசாயிக்கான சான்றிதழ், கிணறு அமைந்துள்ள நில வரைபடம், மின் இணைப்பு அட்டை நகல், வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன், நாகை, தெற்கு பால்பண்ணைச்சேரியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகி, விண்ணப்பித்து மூதுரிமை அடிப்படையில் பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT