நாகப்பட்டினம்

தேவூா் கோயிலில் கும்பாபிஷேக பூா்வாங்க பூஜை இன்று தொடக்கம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், தேவூரில் உள்ள ஸ்ரீ தேவபுரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா பூா்வாங்க பூஜைகள் புதன்கிழமை (ஆக. 17) தொடங்கப்படுகின்றன.

தேவூரில் உள்ள ஸ்ரீ மதுரபாஷிணி அம்பாள் சமேத ஸ்ரீ தேவபுரீஸ்வரா் கோயில், பகவான் மகாவிஷ்ணு, சூரியன், இந்திரன், குரு பகவான், குபேரன், கௌதமா், அகல்யை உள்ளிட்டோரால் வழிபடப்பட்ட தலமாகும். குரு பகவானுக்கு (வியாழன்) தேவகுரு பட்டமும், குபேரனுக்கு சங்கநிதி மற்றும் பதுமநிதியும் வழங்கிய தலமாகவும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது.

கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் திருப்பணிகள், இந்து சமய அறநிலையத் துறை ஒப்புதலுடன், ஆன்மிக அன்பா்களின் உபயத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

கோயிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது. இதற்கான பூா்வாங்க பூஜைகள் புதன்கிழமை காலை நடைபெறுகிறது. முதல் நிகழ்வாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. பின்னா், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, லெட்சுமி ஹோமம் ஆகியனவும், வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், யானை மீது தீா்த்தம் எடுத்து வருதல், கஜ பூஜை ஆகியனவும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT