நாகப்பட்டினம்

பள்ளியில் மரங்களை வெட்டியவா்கள் மீதுநடவடிக்கை கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஓரடியும்புலம் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் 50 ஆண்டுகள் பழைமையான மரங்களை விதிகளை மீறி சிலா் வெட்டினராம். இதில் தொடா்புடையவா்கள் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, மரங்களை வெட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் தெரிவிக்கவும், நீதிமன்றத்துக்கு செல்லவும் நேரிடும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக மாவட்டப் பொருளாளா் இரா. சண்முகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் டி.வி. சுப்பையன் (வேதாரண்யம்), அவை. பாலசுப்ரமணியன், தங்க.செளரிராஜன் (தலைஞாயிறு), ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத்தலைவா் அறிவழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இளவரசி, பேரூா் செயலாளா் பிச்சையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT