நாகப்பட்டினம்

உணவகத்தில் தீ விபத்து

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் உள்ள உணவகம் ஒன்றில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது.

வேதாரண்யம் மேல சன்னதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் சமையல் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டதால் தீ பற்றியதாகக் கூறப்படுகிறது.

தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் உதவியுடன் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இதனால், அருகில் உள்ள மண்ணெண்ணெய் சில்லறை விற்பனை நிலையம் உள்ளிட்ட கடைகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT