நாகப்பட்டினம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் தொகையை ரூ.1.5 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியா்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ஆா். சீத்தாராமன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம். ஆா். சுப்பிரமணியன் விளக்கவுரையாற்றினாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம். மாரியப்பன், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜி. சுந்தரபாண்டியன், வி. தங்கவேல் மற்றும் வட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT