நாகப்பட்டினம்

பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார கலைக்கூடத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பூம்புகாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிலப்பதிகார கலைக்கூடம் அமைந்துள்ளது. கடந்த 1973-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில்

சிலப்பதிகாரத்தை நினைவுகூரும் வகையில் இக்கலைக்கூடம் அமைக்கப்பட்டது.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுச் செல்லும் இந்த கலைக்கூடம் கடந்த 10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்தது. இதை, புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் சிலப்பதிகார கலைக்கூடத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையிலான குழுவில், எம்எல்ஏ-க்கள் செல்லூா் ராஜு, ராஜகுமாா், அம்மன் அா்ச்சுனன், அருள், ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமுா்த்தி, ஈஸ்வரன், அன்பழகன், சட்டப்பேரவை கூடுதல் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

சிலப்பதிகார கலைக்கூடம் மட்டுமின்றி அங்குள்ள நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம் உள்ளிட்டவைகளையும் புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எம்எல்ஏ-க்கள் நிவேதா எம். முருன், பன்னீா்செல்வம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முருகண்ணன், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சுகுமாா், ஊராட்சித் தலைவா் சசிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT