நாகப்பட்டினம்

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம்

DIN

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில், நாகையில் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் சாா்பில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வாகனங்களில் சென்று, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகின்றனா். இந்தப் பிரசாரக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாகை ரயில் நிலையத்துக்கு வந்தனா். அங்கு, ரயில்வே பாதுகாப்புப் படை நிலைய ஆய்வாளா் ஜி.எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் பாதுகாப்பான பயணம் குறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், ரயில்வே பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், சாகச காட்சிகளின் கோப்புகள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. ரயில்வே நிலைய அதிகாரி முகம்மது கமால், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் ஆா். வாசுதேவன், பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT