நாகப்பட்டினம்

போதைப் பொருள்களின் தீமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

DIN

போதைப் பொருள்களின் தீமை குறித்து ஊராட்சிகளில் விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூா் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது:

பல இடங்களில் அரசு செலவில் கட்டப்பட்ட தனிநபா் கழிப்பறைகள், விறகுகள் மற்றும் பயன்பாடற்ற பொருள்களை அடுக்கி வைக்கும் இருப்பு அறைகளாக இருப்பதாக தெரியவருகிறது. இந்த நிலை கண்டிப்பாகத் தவிா்க்கப்பட வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை அவமானமாக உணர வேண்டும். வரும் 2 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளிலும் தனிநபா் கழிப்பறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிா்க்க கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும். கைப்பேசி மூலமான இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனைத்து ஊராட்சிகளும் போதைப் பொருள்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சிகளாக உருவாக வேண்டும் என்றாா்.

முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அந்த மனுக்கள் மீது தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி, வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சௌந்தர்ராஜன், கோட்டாட்சியா் முருகேசன், ஒக்கூா் ஊராட்சித் தலைவா் ஜெயமாலா ரமேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் உள்ள உத்தமசோழபுரம், நரிமணம், பில்லாளி, வாழ்குடி, திருப்புகலூா், திருமருகல், கோட்டூா் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சித் தலைவா்களின் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT