நாகப்பட்டினம்

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

15th Aug 2022 11:15 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் நடுக்காடு பகுதியை சோ்ந்தவா் ரா. கோவிந்தராஜ் (30). இவா், கடந்த ஆக. 9-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருவாரூா் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சந்தேக மரணம்:

கருப்பம்புலம் நடுக்காடு பகுதியை சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தா (50). இவருக்கு, அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

வேதாரண்யம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT