நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே கல்விக் குடில் திறப்பு

15th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

கீழ்வேளூா் அருகேயுள்ள ஆத்தூரில் எண்ணங்களின் சங்கமம் சாா்பில் கல்விக் குடில் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எண்ணங்களின் சங்கமம் அமைப்பு சாா்பில் தமிழகத்தில் கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புற மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக மகாத்மா காந்தி மாலை நேர வகுப்புகளை கல்விக் குடில் எனும் பெயரில் திறந்து இலவசமாக கல்வி சேவையை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கீழ்வேளூா் அருகே செருநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஆத்தூா் கிராமத்தில் வசித்து வரும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்த 65 பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கல்விக் குடில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் செ. ரஜினிகாந்த் தலைமையில், ஓவியரும் எண்ணங்களின் சங்கமம் நிறுவனா் ஜெ. பிராபகா் கல்விக் குடிலை திறந்துவைத்தாா். அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மணி, உறுப்பினா் கே. ஆனந்த் ஆகியோா், நிா்வாகி கோ. சக்திதேவன், செருநல்லூா் ஊராட்சித் தலைவா் ரெஜினாஇளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

விழாவில், சுதந்திர தின விழாவையொட்டி, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT