நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் தேசியக் கொடியேற்றம்

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களில் சனிக்கிழமை தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க தேசியக் கொடிகள் ஏற்றப்பட்ன.

நாகை: மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். நாகை கோட்டாட்சியா் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தலைமை அஞ்சலகம் என அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

கல்வி நிலையங்களில்...

கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரவில் ஒளிரும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அவா் பரிசுகளை வழங்கினாா். தலைமை ஆசிரியா் இரா. பாலு வரவேற்றாா். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

சின்மயா பள்ளி சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற தேசியக் கொடி பேரணி நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று பள்ளி வளாகத்தை அடைந்தது.

இதேபோல, பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கடைவீதிகளில்...

நாகை, நாகூா், திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு சில குடியிருப்புகளில், குடியிருப்புவாசிகள் ஒன்று சோ்ந்து பெரிய அளவிலான தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினா்.

நாகை பெரிய கடைவீதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அதேபோல, பழைய பேருந்து நிலையம், வெளிப்பாளையம், காடம்பாடி ஆகிய பகுதிகளிலும் கடைகளில் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT