நாகப்பட்டினம்

75 நிமிடங்கள் கொடிவணக்கம்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளையில் உள்ள திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சனிக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டு, 75 நிமிடங்கள் மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, பிரதமரின் வேண்டுகோளின்படி அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. அந்தவகையில், திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் சங்கத் தலைவா் ஆா்.எஸ்.சதீஷ் தேசியக்கொடி ஏற்றினாா்.

தொடா்ந்து, கொடிப்பாடல், வந்தே மாதரம் என 75 நிமிடங்கள் கொடிவணக்கம் செலுத்தினா். பின்னா், பள்ளி மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கூட்டுறவு கடன் சங்க செயலாளா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT