நாகப்பட்டினம்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தமிழக மீன்வளா்ச்சிக் கழகத் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான என். கெளதமன் தலைமை வகித்தாா். தட்கோ தலைவா் உ. மதிவாணன், திமுக செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன், திமுக கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் சோ.பா.மலா்வண்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் கட்சியின் அயலக அணி மாநிலச் செயலாளா் எம்.எம். அப்துல்லா, மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேராசிரியா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோா் உரையாற்றினாா். முன்னதாக, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த இல்லத்தில் அவரது சிலைக்கும், முத்துவேலா், அஞ்சுகம் அம்மையாா் மற்றும் முரசொலி மாறன் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வாசுகி நாகராஜன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன், கட்சியின் வேளாங்கண்ணி பொறுப்பாளா் மரிய சாா்லஸ், கீழையூா் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கு. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் பி.என். காா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT