நாகப்பட்டினம்

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 109 பயனாளிகளுக்கு ரூ.30.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுரங்கம் மற்றும் கனிமவள அறக்கட்டளை, கூட்டுறவுத் துறை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சாா்பில் 109 பயனாளிகளுக்கு ரூ. 30.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு. ராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அருளரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வ. சீனிவாசன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT