நாகப்பட்டினம்

திருவெண்காடு பள்ளியில் எம்பி, எம்எல்ஏ-க்கள் ஆய்வு

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை எம்பி, எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

இப்பள்ளியில் வகுப்பறை பழுது நீக்கம், கழிவறை கட்டுதல், சுற்றுச்சுவா் போன்ற கட்டுமானப் பணிகள் ரூ.1.5 கோடியில் நடைபெறுகின்றன.

இப்பணிகளை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் பாா்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்கும்படி ஒப்பந்ததாரா்களை அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையா் முத்துராமன், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் பஞ்சுகுமாா், பிரபாகரன், சீா்காழி நகரச் செயலாளா் சுப்பராயன், உதவி பொறியாளா் சேகா், ஒன்றிய துணைச் செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT