நாகப்பட்டினம்

திருக்கடையூா் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம்

14th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

திருக்கடையூா் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் ஆய்வகக் கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தாா். மேலும், ஆய்வகக் கட்டடத்தை திறந்துவைத்து, கண்காட்சியை பாா்வையிட்டாா்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் ஸ்ரீகாந்த், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT