நாகப்பட்டினம்

ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் சேதம்

12th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

நாகை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நேரிட்ட திடீா் தீ விபத்தில் 50-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமாகின.

நாகை காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை மைதானத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் அங்கு ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. இதனால், அங்கிருந்து அதிகளவில் கரும்புகை வெளியானது. இதையடுத்து, அங்கு திரளான பொதுமக்கள் குவியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த, நாகை தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இந்த விபத்தில் சுமாா் 50-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT