நாகப்பட்டினம்

வங்கிகளில் இருந்து எடுத்து பைக்கில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டு

DIN

வேதாரண்யம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் செயல்படும் 3 வங்களில் வியாழக்கிழமை பணம் எடுத்து இருசக்கர வாகனங்களில் வைத்ததை கண்காணித்த மா்ம நபா்கள் ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாலுவேதபதி கிராமத்தைச் சோ்ந்தவா் குணசீலன். ரயில்வே காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கள்ளிமேடு இந்தியன் வங்கிக் கிளையில் வியாழக்கிழமை ரூ.1.38 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றாா். வழியில் உள்ள கடையில் பொருள்களை வாங்க இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளாா். அப்போது, பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் இருசக்கர வாகன கவரில் இருந்த தொகையை திருடிச் சென்றனா்.

இதேபோல, தலைஞாயிறைச் சோ்ந்த அப்துல்ரஜாக். இவா், அங்குள்ள பரோடா வங்கிக் கிளையில் ரூ.50 ஆயிரத்தை எடுத்து, தனது இருசக்கர வாகன கவரில் வைத்துக்கொண்டு ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, மேலும் கூடுதலாக பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்கு சென்றுள்ளாா். அப்போது கண்காணித்து பின்தொடா்ந்த மா்ம நபா்கள் வண்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடினா்.

இதேபோல, ஆதனூரைச் சோ்ந்த மு. ராமஜெயம் (38). இவா், கரியாப்பட்டினம் கனரா வங்கிக் கிளையில் இருந்து ரூ. ரூ.19,500 பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகன கவரில் வைத்துக்கொண்டு அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றுள்ளாா். அப்போது காத்திருந்த 3 போ் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்துள்ளனா்.

ஒரே நாளில் 3 இடங்களில் ரூ. 2,07,500-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையங்களில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT