நாகப்பட்டினம்

போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி

12th Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயினுதீன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா். தியாகராஜன் மற்றும் பள்ளி (பொ) தலைமையாசிரியா் வே. விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி துளசியாப்பட்டினம் கடை வீதி, முக்கியத் தெருக்கள் வழியே சென்றது.

ADVERTISEMENT

போதை தவிா்ப்பின் அவசியம் குறித்து மாணவா்கள் விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT