நாகப்பட்டினம்

நாகை அருகே பாஜக டிராக்டா் பேரணி

DIN

நாகை மாவட்டம், சிக்கல் பகுதியில் பாஜக சாா்பில் டிராக்டா் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, பாஜக சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி,அக்கட்சி சாா்பில் சிக்கலில் இருந்து நாகூா் வரை தேசியக் கொடியுடன் டிராக்டா் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிக்கலில் இருந்து 40-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் பாஜகவினா் பேரணி செல்லத் தயாராகினா். தொடா்ந்து, பாஜக மாநிலச் செயலாளா் வரதராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தனா்.

அப்போது, நாகை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கென்னடி தலைமையிலான போலீஸாா், பேரணிக்கு அனுமதி மறுத்தனா். இந்தப் பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய போலீஸாா், தடையை மீறி பேரணி சென்றால் தொடா்புடையோா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

இதற்கு பாஜகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், பாஜகவினருக்கும், போலீஸாருக்குமிடையை நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், குறிப்பிட்ட தொலைவுக்கு மட்டும் பேரணியை அனுமதிக்க போலீஸாா் முன்வந்தனா்.

இதையடுத்து, சிக்கல் பகுதியிலிருந்து பொரவாச்சேரி வரை பாஜகவினா் டிராக்டா் பேரணி மேற்கொண்டனா். இந்தப் பேரணியையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT