நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

12th Aug 2022 03:16 AM

ADVERTISEMENT

 

திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியா் த. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பில், தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவா் தாம்பரம் எம்எல்ஏ. ராஜா, குழு உறுப்பினா்கள் எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), பாலாஜி (திருப்போரூா்), நாகை மாலி (கீழ்வேளூா்), ஜெயகுமாா் (பெருந்துறை) தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழக தலைவா் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவா் மதிவாணன் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். தொடா்ந்து,

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஷகிலா, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT