நாகப்பட்டினம்

75 அடி நீள தேசியக் கொடியுடன் பேரணியாகச் சென்ற பள்ளிக் குழந்தைகள்

12th Aug 2022 09:43 PM

ADVERTISEMENT

நாகையில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக் குழந்தைகள் 75 அடி நீள தேசியக் கொடியுடன் வெள்ளிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்கள் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நாகை பால்பண்ணைச்சேரியில் உள்ள தனியாா் பள்ளி சாா்பில் 75 அடி நீள தேசியக் கொடியுடன் கூடிய விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைத் தொடங்கிவைத்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பேரணியைப் பாா்வையிட்டு, தேசியக் கொடியுடன் பேரணியில் அணிவகுத்த குழந்தைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். நாகை அவுரித் திடலில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணி, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியே சென்று பால்பண்ணைச்சேரியில் உள்ள பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT