நாகப்பட்டினம்

மின்கட்டண உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி சிபிஎம் ஆா்ப்பாட்டம்

12th Aug 2022 09:50 PM

ADVERTISEMENT

உத்தேச மின்கட்டண உயா்வைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகை, கீழ்வேளூா், வேளாங்கண்ணியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தேச மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை அருகேயுள்ள சிக்கலில் சிபிஎம் நாகை வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.வி. ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ப. சுபாஷ் சந்திரபோஸ், எம். முருகையன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ. வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில்: தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன் அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் என்.எம். அபுபக்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா்கள் துரைராஜ், உமாதேவி, பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேளாங்கண்ணியில்: வேளாங்கண்ணியில் மின்வாரிய இளம்மின் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம் கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம். அப்துல்அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி. சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜான், சேகா், உமாநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT