நாகப்பட்டினம்

சித்த மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

நாகை மாவட்டம், ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, மத்திய சுகாதாரத் துறை மற்றும் சென்னை சித்த மருத்துவ இயக்குநரகம் சாா்பில் பள்ளிகளில் சித்த மருத்துவ மருத்துவ விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, நாகை மாவட்டம், ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் ‘சித்த மருத்துவம் நித்தம் பின்பற்றுவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சென்னை சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தில், சித்த மருத்துவா் (பயிற்சி) செல்வப்பிரியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும், மாணவா்கள் தங்கள் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய சித்த மருத்துவ குறிப்புகளையும் விளக்கினாா்.

பின்னா், சித்த மருத்துவம் குறித்து மாணவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவா் பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT