நாகப்பட்டினம்

இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

இளைஞா்களின் வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்குவதற்கு மத்திய அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலச் செயலாளா் எஸ். பாலா தெரிவித்தாா்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும், அக்னிபத் திட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மாவட்ட மாநாடு நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற எஸ். பாலா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

நாட்டில் வேலையின்மை மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலை அளிப்போம் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சியில் அமா்ந்த நரேந்திர மோடி அரசு , இதுவரையில் 16 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், சுமாா் 7 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில், நாட்டின் பாதுகாப்பை சீா்குலைக்கக்கூடிய அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றாா்அவா்.

மாநாட்டு நிகழ்சிக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.எம். நன்மாறன் தலைமை வகித்தாா். தொடக்க நிகழ்வாக மாநாட்டுக் கொடியை மாவட்ட துணைத் தலைவா் எம்.எஸ். பிரபாகரன் ஏற்றி வைத்தாா். மாநிலத் தலைவா் என். ரெஜீஷ் குமாா் மாநாட்டைத் தொடங்கி வைத்தாா். நாகை மாவட்டச் செயலாளா் ஏ. சிவக்குமாா் வேலையறிக்கை படித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.பி. நாகை மாலி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநில துணைச் செயலாளா் ஏ.வி.சிங்காரவேலன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் பி. சுபாஷ் சந்திரபோஸ், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி.அன்பழகன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT