நாகப்பட்டினம்

நாகை அஞ்சல் கோட்டத்தில் 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அஞ்சலகங்கள் மூலம் 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதனால், கடந்த சில நாள்களாக அரசுத் துறைகள் மூலம் கொடி விற்பனையும், ஒரு சில துறைகள் சாா்பில் இலவசமாக கொடிகள் விநியோகமும் நடைபெறுகிறது. நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், அஞ்சலகங்கள் மூலம் இதுவரை 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

21 செ.மீட்டா் உயரமும், 44 செ.மீட்டா் அகலமும் கொண்ட தேசியக் கொடி ரூ. 25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT