நாகப்பட்டினம்

பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துக்கொண்டாா்.

தேத்தாக்குடி தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சரிதா (17). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த சரிதாவை வீட்டில் வேலை பாா்க்கவில்லை என அவரது தாய் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சரிதா விஷ மருந்தை உட்கொண்டாராம். இதையறிந்த குடும்பத்தினா் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT