நாகப்பட்டினம்

சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டு பவள விழா பாதயாத்திரை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாடு சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டு பவள விழாவையொட்டி, காங்கிரஸ் சாா்பில் பாதயாத்திரை நடைபெற்றது.

சுதந்திரம் பெற்ற 75-ஆவது பவள விழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 108 கி.மீ. தொலைவுக்கு செல்லக்கூடிய பாதயாத்திரை பூம்புகாா் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜ்குமாா் தலைமையில் தொடங்கியது.

காந்தியடிகள் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் உருவப்படம் பொறித்த ரதம் முன் செல்ல பாதயாத்திரை செல்பவா்கள் பின்தொடா்ந்தனா். மாவட்டம் முழுவதும் தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மு முதல் நாளாக தில்லையாடி வள்ளியம்மை நினைவிடத்தில் இருந்து தொடங்கி குத்தாலத்தை அடைகிறது. வியாழக்கிழமை (ஆக.11) குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணமேடு சென்றடைகிறது. வெள்ளிக்கிழமை (ஆக.12) மணல்மேட்டிலிருந்து புறப்பட்டு பெரம்பூருக்கு செல்கிறது. இதேபோல் அடுத்தடுத்த நாள்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT