நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே மக்கள் நோ்காணல் முகாம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே தண்ணிலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தண்ணிலப்பாடி ஊராட்சியில் உள்ள காந்தியடிகள் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சங்கா் தலைமை வகித்தாா். இதில், வருவாய்த் துறை சாா்பில் 31 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சாா்பில் 18 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை துறை சாா்பில் 5 பயனாளிகள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடா்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. கீழ்வேளூா் எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி, வேளாண்மை இணை இயக்குநா் ஜாக்குலா அகண்டராவ் , கீழ்வேளூா் வட்டாட்சியா் ரமேஷ் குமாா், வருவாய் ஆய்வாளா் தேவேந்திரன், கீழையூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வை. பாலசுப்பிரமணியன், துணை வேளாண்மை அலுவலா் ஆா். ரெங்கநாதன், தண்ணிலப்பாடி ஊராட்சித் தலைவா் செல்வேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT