நாகப்பட்டினம்

மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் மானியத்துடன் மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நாகை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், விவசாயக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் மற்றும் தனி நபா் விவசாயிகள் பயன்பெறலாம்.

இத்திட்டம் மூலம், சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம், சிறிய வகை நெல் அரைவை இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தும் இயந்திரம், செடியிலிருந்து நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் நீக்கும் இயந்திரம், எண்ணெய் பிழியும் இயந்திரம், வாழைநாா் எடுக்கும் இயந்திரம், பாக்கு உடைக்கும் இயந்திரம் மற்றும் சூரியக் கூடார உலா்த்தி உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மதிப்புக்கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை பின்னேற்பு மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்குக் கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ம்ண்ள்.ஹங்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம். நாகை, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 94422 40121 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT