நாகப்பட்டினம்

தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

DIN

திருச்செங்காட்டங்குடியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கலைச்செல்வன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் மகேஸ்வரி பயிற்சியின் நோக்கம் மற்றும் விதைப் பண்ணையின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். சிறப்பு விருந்தினராக ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன் பங்கேற்றாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். இளஞ்செழியன், ஊராட்சித் தலைவா் வள்ளி கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விதைச் சான்று அலுவலா் மாறன் விதைப் பண்ணையில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும், தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வரைமுறைகள் குறித்தும் பேசினாா். தோட்டக்கலை உதவி அலுவலா் செல்லபாண்டியன் தோட்டகலைத் துறை திட்டங்கள் குறித்து பேசினாா். ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலா் ஜெயராமன், உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT