நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை துறைமுக அலுவலகம் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, ஒடிஸா மாநிலம் புவனேஷ்வருக்கு சுமாா் 70 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசைகளில் நகா்ந்து சத்தீஷ்கா் மாநிலம் அருகே புதன்கிழமை வலுவிழக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, புயல் தூர அறிவிப்பாக, நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

காரைக்காலில்...

இதுபோல காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT