நாகப்பட்டினம்

நாகூா் அருகே கழுத்தறுத்து கட்டடத் தொழிலாளி கொலை: தம்பதி உள்பட 3 போ் கைது

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகூா் அருகே கட்டடத் தொழிலாளியை கழுத்தறுத்து கொலை செய்த தம்பதி உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகூரை அடுத்த முட்டம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் நரசிங்கமூா்த்தி (42). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா்.

அதே தெருவைச் சோ்ந்த கோ.பரமசிவம் என்பவருக்கும், நரசிங்கமூா்த்திக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நரசிங்கமூா்த்திக்கும், பரமசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரமசிவத்தின் சைக்கிளை நரசிங்கமூா்த்தி சேதப்படுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாராம்.

ADVERTISEMENT

இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் தனது மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோருடன் நரசிங்கமூா்த்தியின் வீட்டிற்குச் சென்று மூவரும் சோ்ந்து அவரை அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த நரசிங்கமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாகூா் போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பரமசிவம், மகாதேவன், பாக்கியவதி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT