நாகப்பட்டினம்

நாகையில் காங்கிரஸாா் சுதந்திர தின பாத யாத்திரை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் 75-ஆவது சுதந்திர தின பாத யாத்திரை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் அறிவுருத்தல்படி, நாகை மாவட்டத்தில் காங்கிரஸாா் 75-ஆவது சுதந்திர தின பாத யாத்திரை மேற்கொண்டு, மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆக.9 முதல் 14- ஆம் தேதி வரை மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொள்கின்றனா். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா, நாகையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் நாகை நகரத் தலைவா் பி. உதயச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் விஎஸ்ஏ. தஸ்லீம், மாவட்டப் பொதுச்செயலாளா் அப்துல்காதா், மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எ. கோபி, வட்டார துணைத் தலைவா் பாலசுப்ரமணியன் ஆகியோா்முன்னிலை வகித்தனா்.

கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா பங்கேற்று, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். தொடா்ந்து, பாத யாத்திரையை தொடங்கிவைத்தாா். நாகை முதல் கல்லாா் வரை நடைபெற்ற பாத யாத்திரையில் பங்கேற்ற கட்சியினா் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறியும் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியும் பிரசாரம் செய்தனா். கட்சியினா், பெண்கள் கட்சிக்கொடியை கையில் பிடித்தப்படி சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT