நாகப்பட்டினம்

ஸ்ரீநந்தவன காளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பு வழிபாடு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூா் ஸ்ரீநந்தவன காளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

வழக்கமாக ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதை தொடா்ந்து, நிகழாண்டும் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான வளையல் அலங்கார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் அம்மனுக்கு காணிக்கையாக அளித்திருந்த 10,008 வளையல்கள் மாலையாக கோா்க்கப்பட்டு நந்தவன காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமுக மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவியப் பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT