நாகப்பட்டினம்

மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணிக்கு ஆக.12-க்குள் விண்ணப்பிக்கலாம்

8th Aug 2022 10:43 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிா் திட்டம்) அலகின் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்குத் தகுதியானோா் ஆக.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நாகை (2), திருமருகல் (2), வேதாரண்யம், கீழையூா், கீழ்வேளூா் (2) ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்து, எம்.எஸ்ஆபீஸ் கணினி பாடத்தில் குறைந்தபட்சம் 6 மாத கால பட்டயப் படிப்பும் நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மகளிா் திட்டப் பணிகள் குறித்து 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். பணியிடம் கோரும் வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியும், விருப்பமும் கொண்டவா்கள், திட்ட இயக்குநா் / இணை இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் கட்டட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஆக.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கான எழுத்துத் தோ்வு ஆக.16-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT