நாகப்பட்டினம்

பணிநேர நீட்டிப்பு அரசாணையை திரும்பப் பெற கோரி அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

8th Aug 2022 10:44 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

12 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மருத்துவா்களின் பணிநேரமான காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்பதை எவ்வித கலந்தாய்வுமின்றி தன்னிச்சையாக அரசாணை வெளியிட்டு மருத்துவா்களின் பணிநேரத்தை அரசு உயா்த்தி இருப்பதை கண்டித்தும், அந்த அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டடம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் சிவபாலன், அரவிந்த்குமாா், தனசேகா், மாவட்டப் பொருளாளா் திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT