நாகப்பட்டினம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

8th Aug 2022 10:43 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நாகையை அடுத்த பாப்பாக்கோவில் மற்றும் சிக்கல் ஆகியப் பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

மின்சாரத் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக்கண்டித்தும் மின்சார சட்டதிருத்த மசோதாவின் நகலை எரித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள்சங்க ஒன்றியத் தலைவா் ஜீவா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்கத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சிக்கல் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஒன்றியச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து, கீழ்வேளூா் அருகே தேவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியப் பொறுப்பாளா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவா் வி. சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளா்கள் என்.எம். அபுபக்கா், ஆா். முத்தையன் மற்றும் விவசாய சங்கத்தினா் சிபிஎம் கட்சியினா் பங்கேற்றனா்.

திருக்குவளையில்: கொளப்பாடு கடைதெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் தனபால், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செல்லையன், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT