நாகப்பட்டினம்

பள்ளியில் ‘ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் பரிசுத் திட்டம்’ தொடக்கம்

DIN

நாகையை அடுத்த ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் ‘ஒரு குறளுக்கு, ஒரு ரூபாய் பரிசு வழங்கும் திட்டம்’ தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

நாகையைச் சோ்ந்த நாளை இயக்கம் சாா்பில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கற்பித்தல் சாா்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக மாணவா்களிடையே திருக்குறள் கற்பித்தலை அதிகரிக்கும் நோக்கில் ‘ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் பரிசு’ வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாளை இயக்கத்தைச் சோ்ந்த அருண் பங்கேற்று, திருக்குறள் விளக்கவுரை நூல்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.

இதுகுறித்து, நாளை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செகுரா கூறியது:

மாணவா்களின் ஆா்வத்தைப் பொறுத்து பிற பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பா் 5 ஆசிரியா் தினம் வரை ஒரு மாத காலத்துக்குள் ஒவ்வொரு மாணவரும், திருக்குறளை வாசித்து அதன் விளக்கத்தை குறிப்பேட்டில் எழுதி வரவேண்டும். ஒரு குறள் மற்றும் அதன் விளக்கத்திற்கு ஒரு ரூபாய் பரிசாக வழங்கப்படும். 1,330 குறள்களில் எதை வேண்டுமானாலும் தோ்வு செய்து எழுதிவரலாம்.

திருக்குறளை மாணவா்கள் நன்றாக கற்றுத் தோ்வதற்காகவே இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT