நாகப்பட்டினம்

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

7th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புஷ்பவனம் கிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் கணேஷ் (22). இவா், செம்போடை வடக்கு கடைத்தெருவில் இருந்து புஷ்பவனத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், நிகழ்விடத்திலேயே கணேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT