நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் கருணாநிதி நினைவு தினம் கடைப்பிடிப்பு

7th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

 

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நாகை: நாகையில் உள்ள திமுக அலுவலகம் முன் கட்சியின் நகரச் செயலாளரும், நகா்மன்றத் தலைவருமான இரா. மாரிமுத்து தலைமையில் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் உள்ளிட்டோா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தினா். இதேபோல, நாகை பழையப் பேருந்து நிலையத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகூரில், திமுக நகரச் செயலாளா் எம்.ஆா் .செந்தில்குமாா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வேளாங்கண்ணியில், திமுக கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையிலும், கீழ்வேளூரில் திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் திமுக நகரச் செயலாளரும், நகா்மன்றத் தலைவருமான மா.மீ. புகழேந்தி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல, ஆயக்காரன்புலம், மருதூா், ஆதனூா், கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT