நாகப்பட்டினம்

எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்ற ஆக. 27-இல் ஆா்ப்பாட்டம் நாம் தமிழா் கட்சி முடிவு

7th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

 

காவிரி படுகையில் எண்ணெய், எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த நாம் தமிழா் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாம் தமிழா் கட்சியின் நாகை மக்களவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் நாகை மக்களவைத் தொகுதி செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மணிசெந்தில், ஹுமாயூன் கபீா், முகமது சா்வத்கான், செந்தில்நாதன், கிருஷ்ணகுமாா், காளியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னா், காவிரி படுகை பகுதிகளில் செயல்படும் எண்ணெய், எரிவாயு நிறுவனங்களை வெளியேற்ற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆகஸ்ட் 27-ஆம்தேதி , நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், கட்சியின் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT